​(நாச்சியார் மறுமொழி − 93)

பழகிய நாள் மறந்து விட்டாய், ஏனடி பெண்ணே? உன்−

பார்வையிலே மாற்றமும் ஏன்? சொல்லடி பெண்ணே!

அழகிய உன் வதனமுமே, இப்பொழுதெல்லாம், அன்னியனாய், எனை நோக்கும் காரணம் என்ன?
இரு கரத்தால் எனை அணைத்தாய், சுகமே சேர்த்தாய்−உன்

இருவிழியில் எனை வைத்து, இதமே கொடுத்தாய்;

பருவ எழிலை, எனக்கான பரிசாய் அளித்தாய்−இன்று,

பாராமல், பேசாமல், எனை ஏன் வதைத்தாய்?
இன்று, நாளை என்று நாட்கள் நகருகின்றதே−அது

என்று உந்தன் உளம் உணரும், அறியகில்லேனே;

நின்று கொஞ்சம் சிந்திப்பாய், என் நிலை நீயும்−நான்

என்றும் உனக்கு அடிமை தானே, அடைக்கலம் தருவாய்!
மனதில் உன் மேல் காதலை நான், வளர்த்துக் கொண்டேனே−உனை

மறக்க ஒரு வழியுமின்றி, வந்து நின்றேனே!

சினம் ஒழிந்து, என்னை நீயும் ஏற்றுக் கொள்வாயா? உன்−

செவ்வடியில், சுயம் இழந்தேன், சேர்த்துக் கொள்வாயா??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s