​(நாச்சியார் மறுமொழி − 96)

எத்தனை நாள் வேண்டி நின்றேன்−

அத்தனையும், புறக்கணித்தாய்;

பித்தனாய், தெருவில் நின்றேன்−

இத்தனையும், உன் இரும்பு நெஞ்சால்!
நித்தமே நெஞ்சில் வைத்து−

சித்தமே கலங்கி நின்றேன்;

மொத்தமாய் எனை மறந்து−

தத்தை நீ, களிக்கின்றாயே!
முத்துக்குள் சிப்பியதாய்−

மூடி வைத்த ரகசியமே,

மத்தவரோ கண்டு கொண்டார்−எனை

மதி இழந்ததாய், ஏசுகின்றார்!
பெத்தவள் புலம்புகின்றாள்−

போதுமடா, மறந்திடென்று!

இத்தனை வீம்புடையாள்−

இனி நீயும் மறுத்திடென்று!
எத்தனை, யார் சொல்லிடினும்,

என்னவளே, நீ எனக்கு வேண்டும்;

முத்தொன்று இதழ் பதித்து−

மோட்சமும் நீ தர வேண்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s