​(நாச்சியார் மறுமொழி − 100) 

என்னிலே அன்று கலந்தாள்…

இன்று, எங்கு அவளும் மறைந்தாள்?

கண்ணிலே வரும் காட்சியெல்லாம்−

கன்னி அவளே நிறைந்தாள்!
பூவையை மனம் நாடுதே−இந்த

பூக்களும், சேதி சொல்லுமோ?

பாவையை உளம் தேடுதே−இந்த

பறவையெல்லாம், போய் சொல்லுமோ?
கண்களில் நீர் பெருகுதே−இந்த

காற்றும், அவளிடம் சொல்லுமோ?

கண்ணனும், படும் துயரெல்லாம்−இந்த

கார்மேகங்கள் கொண்டு செல்லுமோ?
அன்பின் ஆழமே, அவள் அறிவளோ?−இல்லை

அலட்சியம் தான் செய்வளோ?

என்பெலாம் எனக்குருகுதே−இது

ஏதும், அவளுக்கும் தெரியுமோ?
சோர்ந்ததே, என் வார்த்தைகள்−இனி

செய்வதென்ன, நான் அறியேனே..

சேர்ந்திட ஏதும் வழி உண்டோ?−அவள்

சிந்தையும் மாறும் நிலையுண்டோ?
வெண்ணிலா, மெல்லத் தேய்ந்ததே−அது

விண்ணிலே என்று தோன்றுமோ?

என் நிலா, என்னைத் தேடுமோ?−இந்த

பெண்ணிலா என்று கூடுமோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s