​(நாச்சியார் மறுமொழி − 101)

உன்னையே நினைக்குதடி என் மனம்−

தன்னையே, வெறுக்குதடி!

சண்டி மாடினைப் போல்−உனையும்

சுத்தியே வருகுதடி!
கட்டி இழுத்து வந்தாலும்−அதுவும்

கட்டுத் தெறித்தோடுதடி;

ஒட்டி உறவாடிடவே−இந்த

உள்ளமே ஏங்குதடி!
இன்று நான் சொல்வதெல்லாம்−உன்

செவியும், கேளாது போனதோடி?

ஒன்றும் தெரியாதவள் போல்−நீயும்

ஊமையே ஆனாயோடி?
பருவங்கள் மாறுதடி−உன்

பார்வையும் மாறுமோடி?

துருவங்கள் ஆனோமேடி−இந்த

துன்பமும் தீருமோடி?
ஆராரோ வருகிறாரடி−என்

அன்பை வேண்டுகிறாரடி;

பாரேன் நான் யாரையுமே−என்

பார்வையில், பாவை நீ ஒருத்தியேடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s