​(நாச்சியார் மறுமொழி − 97)

சரி தானா? சரி தானா?

நீ செய்யும் செயலே, சரி தானா?

புரிந்தாலும், எனை அறிந்தாலும்,

பெண்ணே, நடிக்கிறாய்! சரி தானா?
சினம் கொண்டு சென்றாய் நீ என்று−

சற்று, தள்ளியும் நின்றேன், நான் அன்று!

இனம் கண்டு கொள்வாய் என்றிருந்தேன்−

இப்படி ஆகிடும் என்றறியேன்!
ஊர் கண் பட்டதோ நம் மீது?

உலகமே வாடியதோ, நமை கண்டு?

யார் கண் பட்டால், எனக்கென்ன?

உன் கண் படட்டுமே, என் மீது!
கடந்தவை யாவும் கனவென்று−

கன்னியும் நினைத்தால், நலம் உண்டு;

இடமும் மனதில், நீ கொடுத்தாலே,

இந்த யாதவன், புனர் ஜென்மம் எடுப்பானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s