​(நாச்சியார் மறுமொழி − 99)

உனக்கு மட்டும், என் இதயம் தந்தே விட்டேன்−அதில்

ஒருத்தருக்கும், பங்கு என்றும் தரவே மாட்டேன்;

எனக்கு நீயும், உன் மனதை தந்தாயென்றால்−

இங்கு என்னை விட பேறுடையோர், எவரும் உண்டோ?
வந்திடுவாய், வந்திடுவாய், என் அருகில் நீ−

தந்திடுவாய், தந்திடுவாய், தளிர் பொன் மேனி;

கட்டி வைப்பேன், கட்டி வைப்பேன், என் கண்களிலே−உனை

காணாமல் ஒளித்து வைப்பேன், என் நெஞ்சினிலே!
மலர்களெல்லாம் வாடிடுதே, மாலை சூட வா−

இந்த மாலையுமே மறைகிறதே, மார்பில் சாய வா;

இணைந்திடுவோம், இணைந்திடுவோம், ஓர் உயிராக−

இனி, இடைவெளியே இல்லாமல், இன்பம் காணுவோம்!
பார்ப்பவர்கள் பார்க்கட்டுமே, நாணம் என்ன?

பாவை நீ என்னவள் தான், அச்சம் என்ன?

யாரும் வந்து கேட்பதற்கே, ஏதுமில்லையே−

யாதவனின் காதலி நீ, இதில் ஐயமில்லையே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s