​(ராமாயணம் − பகுதி − 4)

(உத்தர காண்டம்)
அரக்க வேந்தன் ராவணனின்

ஆதியும், அந்தமும் அறிந்தவராம்−

அருமறை போற்றிடும் முனிவர்களும்,

திருமகனின் புகழ் பாடினரே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
குலமகள் சீதையின் அணைப்பினிலே,

கோமகன், ஆனந்தம் அடைந்தனனே;

நீதியும், நேர்மையும் கடைபிடித்து−

நாட்டினிலே, நெறி நாட்டினனே!

வனந்தனில், வேறு வழியின்றி,

மனம் கவர் மங்கையை, விடுத்தனனே;

அன்பு சத்ருக்னன் தனைக் கொண்டு,

அசுரன் லவணனை முடித்தனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
சுவர்க்கம் சென்ற சம்புகனும்,

சீதா பதியைப் போற்றினனே;

அருமை புத்திரர் லவ குசனும்−

பெருமைப்படும் பிதாஆயினனே!

அயோத்தி நலனும் பெருகிடவே−

அஸ்வமேத வேள்வி செய்தனனே;

காலதேவனும் தாள் பணிந்தே−

கோமகன் வாசல் நின்றனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
நாட்டில் இருந்த ஜனங்களையே−

கூட்டிச் சென்றனன், பெருந்திவமே!

அயன் முதல் அனைத்துக் கடவுளுமே−

இவன் வரவால், மிக மகிழ்ந்தனரே!

விண்ணுலகம் சென்ற அந்நேரம்−

பொன் ஒளி மேனியை எடுத்தனனே!

சம்சாரம் எனும் பெருந்துயரும்,

சேராமல், உயிர் காத்தனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
அறநெறி உலகில் நாட்டிடவே,

அகத்தில், ஆசையும் கொண்டனனே;

சரணம் அடைந்த மாந்தருக்கே−

சத்கதி அளித்து, மகிழ்ந்தனனே!

அசையும், அசையா யாவையுமே−

இசைந்து, தனதாய் காத்தனனே!

தன்னை நாடி வந்தவர்க்கே−

இன்னல், இனி இல்லை என்றனனே!
ராமன் என்பது அவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
வந்த நோக்கமே, பூர்த்தி செய்து−

வைகுந்தம், மீண்டும் அடைந்தனனே;

ஆனந்தம், பேரானந்தமாய்−

அங்கே, தன் நிலை நாட்டினனே!
ராமனின் புகழே, பாடிடுவோம்−

ராமனின் சரணமே, புகுந்திடுவோம்;

ராம சீதையின் நாமங்களே−

நாமும் சொல்லியே, நலம் பெறுவோம்!!
                                  (முற்றும்)

         அஞ்சனை மைந்தன் திருவடி போற்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s