​(நாச்சியார் மறுமொழி − 102)

என் மனம் ஏசுதடி−எனையே

ஏளனம் செய்யுதடி;

இன்னும் எத்தனை நாள்−

பின்னால், நீயும் செல்வாயென்று,

என் மனம் ஏசுதடி−எனையே

ஏளனம் செய்யுதடி!
பாடும் கருங்குயிலின்−

பார்வையில், கேலியே தெரியுதடி;

ஆடும் மயிலுடைய−

அலட்சியம், அகமே கொதிக்குதடி!
ஓடும் மேகங்களின்−

உதாசீனம் உள்ளம் நோகுதடி;

காடும், மலை, ஆறும்−

காணும் போது, கலக்கமே பெருகுதடி!
இத்தனை ஆன பின்னும்,

என் நெஞ்சம் உன்னையே விரும்புதடி;

எத்தனை செய்தாலும் நீ−

பித்தனாய், பின் போகுதடி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s