​(நாச்சியார் மறுமொழி − 105)

எந்தன் பைங்கிளி, பார்த்துப் பேசடி,

எத்தனை நாள் நீயுமே, இருப்பாய் இப்படி?

உந்தன் கண்ணனின் வாழ்வும் இன்றுமே−

வஞ்சி நீ இன்றியே, ஊனமானதே!
மேகம் போல பொழிந்திடுவேன், எந்தன் அன்பையே−அதில்,

தாகம் எல்லாம், தீர்த்துக் கொள்வாய், எந்தன் நங்கையே!

கோபமெல்லாம் பறந்திடுமே, கேளு சுந்தரி, 

−இந்த

கண்ணனை உன் அடிமையாய், நீயும் அனுபவி!
துணிந்து விட்டாலே, என்றும் துக்கம் இல்லேயே;

இனியுமே நமக்குள்ளே, இல்லை எல்லையே!
அன்ன நடையும், சின்ன இடையும் எந்தன் மனதிலே−ஒரே

ஆரவாரம் செய்யுதடி, நாளும், பொழுதுமே!

கன்னமதை தாங்கிடுவேன், இந்த கரத்திலே−நீ

கண் அசைத்தால் போதுமடி, கணத்தில் நடக்குமே!
காலமெல்லாமே, நானும் காத்துக் கிடக்கிறேன்−

காதலின் பிடியிலே, தினமும் தோற்கிறேன்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s