​(நாச்சியார் மறுமொழி − 115)

இந்த நாளுக்குத் தான், நான் காத்திருந்தேன்−உனை

இணையவே, இங்கு துடித்திருந்தேன்;

என் தனிமைக்கு விடையும் கொடுத்திடு நீ;

என்னில் இரண்டற கலந்தும், கரைந்தும் விடு!
வண்ண மலரின் வாசமே போல்−உன்

எண்ணத்தில் நானும் நிறைந்திருத்தேன்;

இன்று, எதிர் வந்து, உன்முன் நின்று விட்டேன்; என்

இருகரம், நீயும் சேர்ந்து விடு!
தயக்கங்கள் இனியும் உனக்கெதற்கு?−என்

தோளுமே சேர்ந்திட, வந்திடு நீ;

கலக்கங்கள் எல்லாம் விலக்கி வைத்து−இந்த

கண்ணனை கலந்திட, இசைந்திடு  நீ!
வாட்டமே வாழ்வில் ஒழித்து விடு−நல்

விடியலும் இங்கே கண்டிடலாம்−மனக்

கோட்டையின் வாசலும் திறந்து வைத்தால்−இந்த

கண்ணனும் அங்கே வந்திடலாம்!
உடைமை நீயும், எனதல்லவா?−உனது

உயிரும், எனது பொறுப்பல்லவா?

மடமையை கொஞ்சம் மாய்த்து விடு−இந்த 

மாதவன், என்றும் உனக்கல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s