​(நாச்சியார் மறுமொழி −116)

கண்ணனும், ராதையுமாய்−

காணுதல் இன்பம் அன்றோ?

கண்களின் பெரும்பயனோ−இவர்

காதலில் இணைந்து நின்றார்!
வெண்மதியும், வானையும் போல்−

எண்ண அலையும், இதயமும் போல்−இங்கு

கண்ணனும், ராதையுமே−

காதலில் இணைந்து நின்றார்!
விழியும், கருமணியும் போல்−

மொழியும், வார்த்தையும் போல்−இங்கு

கண்ணனும், ராதையுமே−

காதலில் இணைந்து நின்றார்!
பாலில் மறைந்த வெண்ணையைப் போல்−

பாதையில் கலந்த கால்தடம் போல்−இங்கு

கண்ணனும், ராதையுமே−

காதலில் இணைந்து நின்றார்!
இரவில் ஒளிந்த பகல் அது போல்−

உடலில் உறைந்த உயிர் அது போல்−இங்கு

கண்ணனும், ராதையுமே−

காதலில் இணைந்து நின்றார்! 
செம்புலப் பெயல் நீர் அது போல்−

அன்பினால் நெஞ்சமே கலந்து−இங்கு

கண்ணனும், ராதையுமே−

நாம் காணவே, எதிர் நின்றார்! 
காதலை இவர்கள் ஆளட்டுமே−அதில்

கரைந்தே இருவரும் போகட்டுமே!

காதலின் எல்லையைக் காட்டிடவே−இனி

கண்ணனும், ராதையும் என்றாகட்டுமே!!
      (நாச்சியார் மறுமொழி முற்றிற்று.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s