(கங்கா ஹாரதி மெட்டு..)

ஓம் ஜெய ஜெய விஷ்ணு சகி,

ஓம் ஶ்ரீ ஜெய ஜெய க்ருஷ்ண சகி,

ஜெயஜெய ராம ப்ரியேஸ்வரி,

ஜெயஜெய ராம ப்ரியேஸ்வரி

ஜெய ஜெய ஸர்வேஸ்வரி! (ஓம்)

 

உச்சியில் சுட்டியும், நெற்றியில் திலகமும்−

உயர்வினைச் சொல்லிடுதே−உந்தன்

உயர்வினைச் சொல்லிடுதே!

மெச்சி உன் நாமங்கள் பகர்ந்திடும் வேளை−

மங்கலம் பெருகிடுதே!           (ஓம்)
கருணைப் பொழியும் கண் இணை இரண்டும்−

கவலைகள் குறைத்திடுதே−எங்கள்

கவலைகள் குறைத்திடுதே!

வறுமை வாழ்வில் உனக்கினி ஏது−

என்றவை கேட்கிறதே!              (ஓம்)
அழகிய அதரமும், அதன் சிறு நகையும்−

ஆறுதல் அளிக்கிறதே−எமக்கு

ஆறுதல் அளிக்கிறதே!

பழகிய துணையாய் நீ உண்டென்று−எம்

மனம் களிக்கிறதே!                    (ஓம்)
தண்ணொளி பொழியும் வதனம்−உந்தன்

தயையினைச்சொல்கிறதே−உந்தன்

தயையினைச் சொல்கிறதே!

பெண்மையின் பெருமையும், மேன்மையும்−உந்தன்

பேரெழில் பேசிடுதே!                   (ஓம்)
சிற்றிடை மேலே சிற்பமாய் உந்தன்−

சீர் எமை தேற்றிடுதே−அந்த

சீர் எமை தேற்றிடுதே!

பற்றிடும் சேய்களை பரிந்திடும்−உந்தன்

பாங்கினை சாற்றிடுதே!               (ஓம்)
“அஞ்சேல்” என்னும் அபயக் கரத்தால்,

அல்லல்கள் ஓடிடுதே−எங்கள்

அல்லல்கள் ஓடிடுதே!

எண் சாண் உடலும், அதில் உறை உயிரும்−

உனையே நாடிடுதே!                       (ஓம்)
அடைக்கலம் தந்திடும் கமலப் பதங்கள்−

அச்சங்கள் விலக்கிடுதே−எங்கள்

அச்சங்கள் விலக்கிடுதே!

விடையும், வழியும் எமக்கினி நீயென

உள்ளமும் உணர்ந்திடுதே!!             (ஓம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s