​(ஏதேனும் ஆவேனே……)

உன் அணைப்பில் மோகித்துக் கிடக்கின்ற−அந்த

வெண் பசுவும் நானாகக் கூடாதோ?

என் முகத்தை, உன் முகத்தொடு உரசும்−அந்த

பொன் வாய்ப்பும் நான் அடையக் கூடாதோ?
உன் கரம் முகரும் அந்த காராம்பசுவாய்−இந்த

என் ஜென்மம் இருக்கவே கூடாதோ?

“என்னைக் கொள்வாய்” என நீயும்,−எனக்கு

உன்னை உவப்பொடு தரவும் தான் கூடாதோ?
உன் மடி மீது தலை சாய்த்திருக்கும் பசுவாக−ஒரு

உரிமை நான் பெற்றால் ஆகாதோ?

எந்நேரமும் உன் மேனியைத் தொட்டிருக்கும்

அந்த சுகமும், எனக்களித்தால் ஆகாதோ?
உன் இணையடியில் சரணடையும் பசுவாக,

புண்ணியமே ப்ராப்தமுற்றால் தகாதோ?

என் பிறவி கடைத்தேற்ற, ஏதேனும் ஒரு உறவை, 

எனக்கீந்தால், உன் கருணைக்குத் தான்−

அது தகாதோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s