​(காதலினால் கரைகின்றேன்…..)

விண்ணின் முகிலினிலே, உன் முகமே பார்க்கின்றேன்;

வீசும் காற்றினிலே, உன் இசையே கேட்கின்றேன்;

மண்ணின் மென்மையிலே, உன் ஸ்பரிஸம் உணர்கின்றேன்;

மலையின் பனி முகட்டில்,  உன் புன்னகை காண்கின்றேன்!
ஓடும் நதியினிலே, உன் கருணையை அறிகின்றேன்;

ஒய்யார அந்தியிலே, உன் அழகை ரசிக்கின்றேன்;

காடும், மேடுமெல்லாம், உன் கால்தடமே தேடுகின்றேன்;

கண்ணை மறைக்காதே−என் கண் முன்னே வந்திடு நீ!
அலைக்கழிக்காதே; இந்த அபலை துடிக்கின்றேன்;

ஆறாத காதலினால் தினமும் நான் தவிக்கின்றேன்;

விலையாக என் அன்பை, உனக்கே நான் எழுதி வைத்தேன்;

வெற்றிடமாய் நானுள்ளேன்; என்னுள்ளே நிறைவாய் நீ!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s