​(கண்ணனில் கரைந்தேன்…)

ஓருயிர், ஈருடல் எனவே நினைத்திருந்தேன்;

ஓடி வந்து, என் கரம் நீ பற்றும் வரை;

ஆருயிர் உன்னில் மெல்லக் கரைய−

அங்கே நான் எனது சுயமிழந்திருந்தேன்!
நேற்று வரை நீயும், நானுமாய், இரண்டிருந்தது;

இன்று ஏனோ, அது இயல்பாய் தொலைந்திருந்தது;

காற்றும், இடை புக முடியாது தவித்திருந்தது−நாம்

கலந்ததனால், கணங்கள் அங்கே, உறைந்திருந்தது!
குழல் ஒன்று, இசை ஒன்றை, சுகமாய் பிரசவித்தது;

குழைந்து வந்த இசையினிலே, காதல் ப்ராவாகித்தது;

நிழல் கூட, நம்மைக் கண்டு வெட்கி நின்றது;

நாம் ஒன்றான சேதியை, அதற்கு யார் சொன்னது?
உனக்குள்ளே நான் ஒளிந்த காட்சியானது−

உணர்ந்தவர் ஒருவரில்லை என்றிருந்தேனே!

உருண்டு விட்ட கடத்து நீரே சாட்சியானது−

உண்மையும் ஊரறிய, நான் நாணி நின்றேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s