​(காணும் இடமெல்லாம் நந்தலாலா…)

வேங்கடம் சென்றடைந்தேன்;

வேங்குழலோடு அவன் நின்றான்!

எங்கெல்லாம் காணப்புகுந்தாலும்,

அங்கெல்லாம், ஆயனாய், அவனிருந்தான்!
பாவைக்கு அவன், கண்ணனாய் தெரிந்தானே!பார்வையில் தான், ஒரு வேளை, மாறுபாடோ?

பரிதவித்து நான் இருக்க−ஒரு

புரிதலுடன், அவன் சிரித்தான்!
காதலிலே விழுந்தார்க்கு,

காண்பதெல்லாம் ஓர் உருவம்;

கன்னி நான் விழுந்ததுவோ, 

கண்ணன் எனும் அதி மதுரம்!
மீண்டு வர ஆசையில்லை;

மோகக் கடல் மூழ்கி விட்டேன்!

மாதவனை என் மனச்சிறையில்−

மயக்கத்தொடு, ஒளித்திருந்தேன்!
என்னை நானும் இழந்ததனால்,

எங்கும் அவனாய், காட்சித் தந்தான்;

கண்ணின் தவறு ஏதும் இல்லை−

கண்ணன் என்னில் கலந்து விட்டான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s