​(தேடுதே மனம்..வாடுதே உளம்…)

காலையும், மாலையுமாய் நாளெல்லாம் ஓடும்;

கண்ணனை எண்ணி, எண்ணி, இங்கு ஒரு ஜீவன் வாடும்!

வேளையில் அவன் வந்திடவே, உள்ளமுமே ஏங்கும்;

வரவே தாமதித்தால், இன்னும் எத்தனை நாள் தாங்கும்?
விண்மீன் சிரிக்கிறதே, அவள் வேதனையைப் பார்த்து;

வெண்ணிலவு எரிக்கிறதே, வாசலெல்லாம் சாத்து!

பெண் மனம் துடித்திடுதே, போக்கிடம் தான் எங்கே?

கண்ணனை தேடிடுதே, அவன் போனதும் தான் எங்கே?
தனிமையை விரகாக்கி, தென்றலுமே தகிக்கிறதே;

தளர்ந்தே விழுந்தாளே, அவள் தளிர் மேனி துவள்கிறதே!

இனியும் வருவானா? அவன் நெஞ்சம் என்ன இரும்பாச்சோ?

இவளும் படும் துயரம், அவனுக்கென்ன கரும்பாச்சோ?
வேங்குழல் இசை வேண்டாம்; அவள்−

வேதனை தான் கூடிடுதே;

ஏங்கும் ஏந்திழையாள் மன வருத்தம்

ஏறிடுதே!

தாங்கவே வரும் சேதி, சடுதியிலே வந்திடுமோ?

ஆங்கதை கேளும் வரை, இவள் உயிரும் இருந்திடுமோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s