​(வந்தேன், உன் வாசலுக்கு….)

எதை எதையோ, இங்கு, கட்டிக் கொண்டு, 

வதை படுகிறேன், என் வைகுந்தா;

சிதைத் தீயாய் எனைச் சுட்டெரிக்கும்−

இதையெல்லாம் விலக்கி, எனை ஏற்பாயோ?
கணக்கில் அடங்கா குற்றங்கள்−

காலம் முழுதும் செய்து வந்தேன்;

மனத்துள் உன்னை வைத்திடவே−

மறுத்து, நானும் தவிர்த்து வந்தேன்!
பாதை மாறிய பயணங்களால், என்

வாதை மிகவே ஆயிற்று;

ஏதமில்லாத என் கோவிந்தா!

எனை மீட்க வல்லவன் நீ தானே!
ஆறாத் துயரில் அடியேனும்−

அழுதே அமைந்தேன், பல காலம்;

பாராமுகமே ஏன் ஐயா? −எனை

பாலிக்க, இங்கே, யார் ஐயா?..
போகட்டும், பேதையும் பாவமென்று−

பரிந்தால் ஏதும் குறையுமுண்டா?

ஆகட்டும், பார்க்கலாம் பிறகென்று−

அலைக்கழித்தால், அதில் நிறையுமுண்டோ?
அந்தோ பாவம் அபலை என்று−

ஆதரித்தால் போதும்−வாழ்வேனே;

இந்தா தந்தேன், என் இணையடியே−

என்றே கனிந்தால், யான் உய்வேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s