​(எனக்கும், உனக்கும் இசைந்த பொருத்தம்…)

கண்ணின் மணியே நீ தான் என்றேன்;

கண்ணுள் வந்து அமர்ந்தே கொண்டாய்!

பெண்ணின் இதயம் உனதே என்றேன்;

பிரித்து, அதையும் எடுத்தே  சென்றாய்!
எண்ணம் எல்லாம் நுழைந்தாய் என்றேன்;

எண்ணத் துளிகள் நிறைந்தே நின்றாய்!

தண்ணீராய், என்னில் கலந்தாய் என்றேன்;

தலைவன் தன்மை அதுவே, என்றாய்!
மூச்சிலும் உன்னை உணர்ந்தேன்  என்றேன்;

முகுந்தன் பேறு இதுவே என்றாய்!

பேச்சிலும், உந்தன் புராணம் என்றேன்;

பாவைக்கழகு,  அதுவே என்றாய்!
இத்தனை என்னில் மாற்றமும் தந்தது−

உந்தன் அழகிய உறவே என்றேன்;

அத்தனையும் நான் அறிந்ததனாலே,

அன்பே, உன்னை ஆட்கொண்டேன் என்றாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s