​( அன்புள்ள அரவிந்தா…..வணக்கம்…)

என் மனதை எழுதி, உனக்கு அனுப்ப தெரியலே;

எழுத வந்த வார்த்தைகளுக்கு, அதை சொல்லத் தெரியலே;

பெண் மனதை புரிய வைக்க, வழியும் தெரியலே;

பொங்கி வரும் காதலையும், மறைக்கத் தெரியலே !
உருகி நானும் தவிப்பதெல்லாம், சொல்லில் அடங்குமா?

உணர்வுகளின் போராட்டம், சொல்லி முடியுமா?

சறுக்கி விழும் பதங்களுக்கு, சக்தி கூடுமா?

சிந்தை அதன் ஓட்டமெல்லாம் உன்னைச் சேருமா?
பாதி சொல்லி முடித்ததெல்லாம், பார்த்துச் சிரிக்குதே;

பாவை எந்தன் தடுமாற்றம், பாதை மறிக்குதே;

மீதி சொல்ல வந்ததெல்லாம், நெஞ்சில் நின்றதே;

மயங்கிய என் பெண்மை, அங்கு மௌனமானதே!
மடல் வந்து சேர்ந்தால் தான், மனமும் புரியுமா?

மோகம் கொண்ட மங்கையை, உன் உளமும் அறியுமா?

தடம் மாறிய, என் செயல்கள் யாவும் சாட்சியாகுமே!

தெரிந்து நீயும் இங்கு வந்தால், எனக்கு மீட்சியாகுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s