(மன்னிக்க வேண்டுகிறேன்…..)

கோபியர் படையும் சூழ்ந்து நின்றால்,

கோபாலன் செய்வது  என்னடியே?

கோபம் கொண்டு, நீ வாளாதிருந்தால்,

கோவிந்தன் தவிக்கிறான், பாரடியே!
உனை அன்றி என்னுள் யாரே வருவார்−

உத்தமன் சொல்லும் கேளடியே;

எனைக் கொள்ளும் தகுதி யாரே பெறுவார்−

என் ஆவி கிடக்குது, உன் காலடியே!
சினமும், சீற்றமும், நம் சுகம் பறிக்கும்−

சற்றே  நீ அதை நினையடியே;

மனமும், மீளாத் துயரினில் மிதக்கும்−

மாதவன் நிலையை உணரடியே!
வருவார், போவார், பல்லாயிரம் பேரும்−

வஞ்சி, உனக்கே,  ஈடு ஆகுமோடி?

ஒருத்தி நீயே,  என் உள்ளத்தில் என்றும்−

வையமே இவ்வுண்மை அறியுமேடி!
கண்ணும், கண்ணும் பேசி விட்டாலே−

காதலும் அங்கே பிழைக்குமேடி;

பெண்ணே நீயும் யோசித்திட்டாலே−

ப்ரேமையும் மீண்டும் தழைக்குமேடி!
ஆயனும் உன்னை அணைக்கத் துடிக்கிறேன்−

அன்பே, உன்னைத் தந்திடடி;

மாயனும் உன்னை மடிப்பிச்சை கேட்கிறேன்−

மங்கையே, மகிழவே வந்திடடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s