​(உனக்காகவே நான்….!)

கண்ணன்:−

உன்னைப் பார்க்கும்  என் கண்களில் காதல் வரும்;

அந்த காதலும் கனிய, கானம் வரும்;

என் கானமும், உன்னை மயக்கி விடும்;

அந்த மயக்கத்தில் உன் மனம் நெருங்கி வரும்!
ராதை:−

நீ இசைத்திட வேண்டாம், என் அன்பே;

நான் என் வசம் இழப்பேன், உன் முன்பே!

அந்த வேங்குழல் உரசும் உன் அதரங்களை−

இந்த கன்னங்கள் கேட்பதும் நீ அறியலையோ?
கண்ணன்:−

கேட்கும் விதத்தில் நீ கேட்டாலே−

கொடுத்தே மகிழ்வான் கண்ணன் என்றும்;

யார்க்கும் “இல்லை” என்று சொல்வதில்லை−

இதை ஏன் இன்னும் நீயும் உணரவில்லை?
ராதை:−

கேட்டு வாங்குவது, காதல் இல்லை;

கேட்காமல் தருவதில் பாபம் இல்லை;

பெண்ணுக்கு “நாணம்” தடை செய்யுமே;

ஆண் மனம் நாடுதல், இங்கு இயல்பாகுமே!
கண்ணன்:−

உன் மனம் புரிந்திடக் காத்திருந்தேன்;

உள் மனம் திறந்திட, எதிர்பார்த்திருந்தேன்;

“உன்னவனாய்” என்னை நீ வரிக்க−

இந்த யாதவன், உனக்காய் இங்கிருந்தேன்!
ராதை:−

ராதையை ஏற்பது உனக்கழகு; இந்த−

கோதையை சேர்வதோ பெரும் அழகு;

பேதை உன் வாசல் வந்து விட்டேன்−

வாதையை தீர்த்தெனை ஆட்கொள்ள வா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s