​(உனக்காகவே நான்…)

காதல் பாடலை உன் கண்ணில் படித்து−

கொஞ்சம், கொஞ்சமாய் இசைப்பேனடி;

கன்னியும் காணும் கனவுக்கெல்லாம்−

கண்ணன் வடிவம் வடிப்பேனடி!
மயங்கிய உந்தன் பார்வையில் நானும்,

மையலின் விளக்கம் எடுப்பேனடி;

கிறங்கிய உந்தன் வதனம் கண்டு−

கற்பனையில் உனை அணைப்பேனடி!
தழுவும் உந்தன் கரங்களினாலே−

தன்னிலை இழந்து தவிப்பேனடி;

எழுதிய ஓவியம் போலும் உன்னை−

என் இதயத் திரையில் வைப்பேனடி!
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும், 

என் நெஞ்சமோ, உனையே நாடுமடி;

பித்தனைப் போலே, எந்தன் உள்ளம்

பாவை உனையே தேடுமடி!
முற்றம் விழுந்த வெண்மதி ஒளியாய்−

மனதில் உனை நான்  காப்பேனடி;

சுற்றம், சொந்தம் நீயென்றாக−

சொர்கத்தை நானும், உணர்வேனடி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s