​(காதலாலே,  கைகள் பின்னிப் பின்னி…)

தன்னந்தனியாய் எனை உணர்ந்த போது,

துணையாய் வந்தது, உன் கரமே;

கன்னம் வழியும் என் கண்ணீர் துடைக்க−

கனிந்து வந்ததும், உன் கரமே!
என்னில் இருந்த ஐயங்கள் போக்கி−

என்னை அணைத்துக் கொண்டது உன் கரமே;

கன்னியின் மனதில், காதலை விதைத்து,

கதகதப்பு ஊட்டியது, உன் கரமே!
அழுத்தமாய் ஒரு அன்பைச் சொல்லி, 

ஆறுதலாய், எனைத் தடவியது உன் கரமே;

தழுவல் இன்பமெல்லாமும், எனக்கு−

தாராளமாய் தந்தது, உன் கரமே!
எனக்கானவன் நீ என்ற உண்மையை

உறுதியாய் சொன்னது உன் கரமே;

உனக்கானவள் நான், என

ஊரறிய வைத்ததும், உன் கரமே!
என் கரத்தோடு, உன் கரம் இணைத்து−

காதல் மொழியைப் புரிய வைத்தாய்;

வரமே உன் கரம் இரண்டும் என, என்னை−

வார்த்தையின்றியே, உணர வைத்தாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s