​(திக்குத் தெரியாமலே….)

எனக்கென்று ஏதும் மிச்சமில்லாமல், ஒரே வெற்றிடமாய்−

எல்லாமும் காணாமல் போயிருந்தது− என் நெஞ்சில்;

எங்கு நோக்கினும் நின் நினைவுகள் மட்டுமே−

என்னைப் பின்னிப் பிணைந்தது சங்கிலியாய்!
என்னை அறியாமலேலே, உனது கைதியானேன்;

ஏனெனத் தெரியாமலேயே, உனக்கு அடிமையுமானேன்;

உனக்கு மட்டும் காரணம் புரிந்திருந்தது போலும்!

உன் இதழ் ஓரத்து ஏளனம், அதை காட்டிக் கொடுத்தது!
தயக்கங்கள் இல்லாத சம்மதம், உனக்கு வசதியானது;

தருணங்களை அவை, தானே அமைத்து தந்தது;

விளக்கங்கள் தேவையின்றி, ஒரு மலர் தன்னை இழந்தது;

விதி வசம் நிகழும், என்ற உண்மை மதியும் ஏற்றது!
பெண்மையின் பரிசாய், உன்னில் நானும் ஐக்கியமானேன்;

பேதை மனம், அதில் ஓர் பெருமிதம் கொண்டது!

எண்ணிப் பார்க்கையில், யாவும் 

விசித்திரமானது−

ஒரு விடையைத் தேடி, என் மனம், உன்னையே வினவி நின்றது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s