​(வா, வா, வசந்தமே….)

போதும், போதும், கிரிதரனே, காதல்

பித்தமும் ஏறுதே, கணம் கணமே!

வேணும், வேணும், உன் சுகமே, எனை

வாட்டுவதேன் நீ, தினம் தினமே?
யாரும் அறியா போதினிலே, 

யாதவா, நீ வரக் காத்திருந்தேன்;

நீரும் நீரும் கலப்பது போல்,

நீ என்னில் கலந்திட,  ஏங்கி நின்றேன்!
என்னுள் ஒளிந்தாய், நீ அன்று; இன்று−

கண்ணில் தெரிய வேண்டுகின்றேன்;

பின்னும் சொல்ல ஏதுண்டு? இந்த−

பெண்ணுக்கு, உனை அன்றி யாருண்டு?
தொட்டால் அதுவே வரமென்று−என்

தளிர் மேனியும் இங்கு சொல்கிறதே; கை−

பட்டால், கொஞ்சம் ஆகாதோ? உன்−

பார்வை அமுதமும் எனை வெல்லாதோ?
ஒரு கரத்தால், என் முகம் நிமிர்த்தி−உன்

இரு இதழ், என் விழி் பதிப்பாயோ? இல்லை,

இரு கரம்,கொண்டென் இடை அணைத்து, இனி−

ஒரு பிரிவில்லை நமக்குள், என விதிப்பாயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s