​(விழி கிடைத்ததே…எனக்கு வழி கிடைத்ததே….)

விழி பேசுதே, கண்ணா, உன் விழி பேசுதே;

வழி உண்டு வாழ்வில், என்ற மொழி பேசுதே!

பழி பாவம் தீண்டாதெனச் சொல்லுதே; அவை−

கழிந்தோடும் கர்ம வினை எனக் கூறுதே!
ஆறுதல் நானுக்கு,  என மொழியுதே;

ஆருயிர் நீ எனக்கு, எனப் பகருதே!

தேறுதல் உண்டெனவே,  துணை வருகுதே;

தேற்றுபவன் நானென்றும், அவை உருகுதே!
எங்கு நான் சென்றாலும், என்னுடன் இருக்குதே;

என் அபயம் உனக்குண்டு எனச் சாற்றுதே;

பொங்குகின்ற பரிவுடனே, எனைப் பார்க்குதே;

பாவி நான் ஆனாலும், நயந்து நோக்குதே!
பாரில் நீ தனியில்லை எனப் பரியுதே;

பார்த்தனின் சாரதி, நான் உளன் என்னுதே;

மாறிடும் துயரங்கள் என,  வார்த்தை உகுக்குதே;

மாலவன் என் மலரடி வீழ், எனவும் வகுக்குதே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s