​(உன்னை, என்னிலிட்டேன்…)

குமுதமாய் எந்தன் மனமும் மலர,

அமுதமாய் உன் கரம் அணைத்தது எனை;

பொழுதுகள் மறந்து, நான் உன்னில் அடங்க,

விழுதாய் நீயும், எனைத் தாங்கி நின்றாய்!
வார்த்தைகள் இனி எனக்கு ஏதுமில்லை;

வஞ்சிக்குத் தேவைகள், இனி ஒன்றுமில்லை;

கார்வண்ணா, உன் மார்பில் தலை சாய்ந்த பின்னே−

கன்னியும், கணத்தினிலே கரைந்தேன் அன்றோ?
என்னை நான் தொலைத்தேன், யான் அறியாமலே;

எண்ணத்தில் நிறைத்தேன், யாரும் சொல்லாமலே!

பின்னையும் உள்ளதோ, ஒரு பிரிவென்பது?

பெம்மானே, இனி என்னால், அது இயலாதது!
பெண் நானும் பரிசானேன், உனக்காகவே−

பேதை என் வாழ்வுமே, மணம் வீசவே;

உன்னால் தான் என் உலகம், உணர்ந்தாயோடா?

உன்னவளை, இனியேனும் ஏற்பாயடா!
ஏழை சொல், அம்பலமும், ஏறுவதுண்டோ?

என் சொல்லும், நின் செவியில் வீழ்வதுமுண்டோ?

கோழை நீ அல்லவென்று, அறிவேனடா; என்−

கோவிந்தா, உன் மார்பில், எனை வையடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s