​(திருவடித்தேனை பருகவே விழைகிறேன்….)

தேவிமாரும் கூசிப்பிடிக்கும் அந்த கோமளத் திருவடிகள்−இந்த

பாவியைக் கரை சேர்க்கும், பாவனப் படகுமன்றோ?

தாவியே, வையம் அளந்த அந்த தாமரைப் பாதங்கள் கண்டால்,

ஆவியும் உருகுமன்றோ, அடைக்கலம் வேறு ஏதுமுண்டோ?
அகலிகையை மீட்டெடுத்த, அந்த அழகிய திருவடிகள், இந்த−

சகத்திலே தவிக்கும் எனை, மீட்கும் ஒரு சாதனம் அன்றோ?

உகந்து, உனை இறைஞ்சுகின்றேனே−

தகவாம் அந்த சரணங்கள், என் சிரமே, நீ வைப்பாயோ?
காடுமேடெல்லாம் நடந்த, அந்த− பங்கயத் திருவடிகள்,

வாடும் என் நெஞ்சத்தில், வசந்தத்தை விதைத்திடுமா? 

ஈடு இணையில்லாத அந்த இனியத் திருவடிகள்−

ஆடுமோ, அனவரதம், அடியேனின் மனத்தகத்தே?
மாறாத மனம் வைத்து, மற்றதெல்லாம் ஒதுக்கி வைத்து,

சீரான உன் தாள்கள், சிந்தையிலே தேக்கி வைத்து,

தீராத காதலுடன், என் தேவனே, உனைத் தேடி வந்தேன்;

ஆராத என் அமுதே, அபலையை, ஆட்கொள்ள வா!
எத்தனையோ என் பிழைகள், எண்ணிலடங்காது;

அத்தனையும் பொறுத்திடும், உன் கருணையோ, சொல்லிமுடயாது;

பித்தன் நான், பேதை நான், பேசுவதால், பயன் ஏது?

அத்தனே, அச்சுதனே, உன் அருளுக்குத் தான் அடைப்பேது?
நாயேனை, நீ நயந்தாலே, என் நலிவெல்லாம் நலிந்திடுமே;

பேயேனின் பாவங்கள், பொடிப்பொடியாய் உதிர்ந்திடுமே;

ஓயாமல், ஒழியாமல், உன் அருளே, பார்த்திருந்தேன்;

தூயோனே, தயாபரனே, தாளிணையில் எனை

ஏற்றிடு நீ!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s