​(உன்னை உளம் நாடுதே….)

ஊர் எல்லைக்கு அருகினிலே,

ஓர் ஆல மரத்தின் நிழலினிலே,

ஆரும் துணையே இல்லாமல், என்−

ஓருயிர் உருகத் தனித்திருந்தேன்!
யாரோ இசைத்தார், எனையும் அசைத்தார்;

நீர் பண்டமாய், நெஞ்சு கரைந்தது அங்கே!

பேரோ, இனமோ தெரியவில்லை; அவர்

ஊரும், உறவும், நான் அறியவில்லை!
பார்வையில் தென்பட தேடி வந்தேன்;

பதுங்கி, மானாய், ஒளிந்து வந்தேன்;

கார்குழல் ஆட, வேங்குழல் மீட்டும்−

கார்வண்ண நிறத்து ஒருவன் கண்டேன்!
ஆர் செய்தார், இந்த அருஞ்சிலையே என

அங்கு, அப்பொழுதே, நான் அதிசயித்தேன்;

சீர் எனக்கு நாணம், என்பதும்  மறந்து, என்−

செவ்விதழ் துடிக்க, மயங்கி நின்றேன்!
பாரில், யாரும் இவன் நிகரில்லை என

பார்த்தவுடன், நான் புரிந்து கொண்டேன்;

சேர்ந்தொரு வாழ்வும், இவனுடன் தானென, 

செதுக்கி, என் நெஞ்சில் வடித்துக் கொண்டேன்!
ஐம்புலனும் அங்கு, அவனில் ஒடுங்க,

அண்ணலின் அன்பை வேண்டி நின்றேன்;

அடைக்கலம் தந்தெனை, ஆதரிப்பான் என,

அவனின் வாசலில் அமர்ந்து கொண்டேன்!
வானம் பார்த்த பூமியைப் போல, 

வஞ்சியும், அவன் சுகம், கேட்டு நின்றேன்;

தானம் தருவாய், உன்னை எனக்கென,

தளராமல், யாசகம் செய்து நின்றேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s