​(நாடினேன், நரசிம்மா…)

நாக்கொண்டு எனது கன்னங்களை நீ தடவிய போதில்,

நாரண நாமம் சொல்லும்  நாவினால், பெறும் பேற்றினை உணர்ந்தேன்;

கரம் கொண்டு நீ எனை அணைத்த போதில்,

கரங்களால்,  முப்போதும், உனை வணங்க

வேண்டுமெனத் தெளிந்தேன்;

திருமடியில் அமரும் வாய்ப்பு கிட்டிய போதில்,

ஒரு மனதாய் உன்னை நினைத்திருக்க, யானும் அறிந்தேன்;

திவ்யமான உன் தரிசனம் கிடைத்த போதில்,

பவ்யமாய், உன் பதகமலம் பற்றியிருக்கவே விழைந்தேன்;
என்னவெல்லாம் செய்தால், எனை நீ ஏற்பாயென,

எண்ணமெல்லாம் உனதாக, அத்தனை போதுமிருந்தேன்;

திண்ணம் உன் சரணங்கள் என, கணமும் உணர்ந்துணர்ந்து,

என் நெஞ்சகத்தில் அவை, திடமாய் இருத்திக் கொண்டேன்;
பிறவா வரம் வேண்டுமெனக் கேட்கவே, துணிந்திருந்தேன்;

பெம்மான் உனபாதம், என் சிரமணியத் தவித்திருந்தேன்; பின் உனை−

மறவாதிருத்தலே மகத்துவம் எனத் தெளிந்து,

மலரடியில் மதுவருந்தும் கருவண்டாய், எனைத் தந்தேன்;
நாடி வந்த நரன் எனக்கு, நற்கதியும் தருவாயோ?

வாடினேன் வைகுந்தா, விடையேதும் எனக்குண்டோ?

சூடினேன் மன ஏட்டில், இந்த சொல் மாலை நானுனக்கு!

கூடி உன்னை சேர்வதெந்நாள், நரசிம்மா, சொல் எனக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s