​(ராதேக்ருஷ்ணா… க்ருஷ்ணராதே…)

கருத்த மாணிக்கமாய்  கண்ணன் ஒரு பாதி;

சிறுத்த இடையழகியாய், ராதை மறு பாதி;

காதலில் மயக்கும் கண் இங்கு ஒன்று;

கனிவில் அணைக்கும் கண் அங்கு ஒன்று;
வேங்குழல் இசைக்கும் அதரம் இவனிடம்;

வேட்கையைத் தணிக்கும் மதுரம் அவளிடம்;

பூங்கரும்பு தாங்கும் கரம் ஒன்று இவனிடம்;

பூவகையோ என்னும் கரம் ஒன்று அவளிடம்;
சங்கம் கொண்ட கை ஒன்று இவனிடம்;

சுடராழி கொண்ட கை ஒன்று அவளிடம்;

மாவீரன் போலும் மார்வம் இவனிடம்;

மாதரசியாய் திருக்கோலம் அவளிடம்;
வீழ்ந்தால், காப்பேன் என்னும் திருவடி,

வேதனை போக்கும் இவன் இனிய செவ்வடி;

வீழாது காப்பேன் என்னும் திருவடி,

வாழ்வையே நல்கும் அவள் அருள் மலரடி;
இணைந்து, இன்பம் நல்கும் இவர் திருஉருவமே,

இம்மைச் சுகம் தந்து, நம்மையே ஆண்டிடும்;

நினைந்துருகி நாளும் தொழவே, நம் வினை,

நம்மை விட்டு நீங்கி, நலிந்தே ஓடிடும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s