​(வந்தேன் உன் வாசலுக்கு…)

வந்தேன் வைகுந்தா, உன்னைக் காணும் ஓர் ஆசையினால்;

நின்றேன் நெடுமரமாய்− வாசலில், என் வினை அழுத்த;

கொண்டேன் தயக்கமுமே, உன் முகமும் பார்த்திடவே;

கண்டேன், கருணையினிலே, நீயும் ஒரு கடல் என்று!
எந்தாய், என் அரசே, என் கலியைத் தீர்ப்பாயோ?

என்னை உன் அணைப்பில், காலமெல்லாம் வைப்பாயா?

அந்தோ, உனைப் பிரிந்து, இத்தனை நாள் தவித்தேனே;

அது நீ அறிவாயோ, என் ஆருயிராம் கேசவனே?
இறையும் உனை நினைந்து, உருகிடவே, செய்திலனே;

இருந்தும், இறைஞ்சி வரம் கேட்டிடவோ, மறந்திலனே;

குறையே வடிவானேன், கோவிந்தா, பொறுப்பாயோ?

கழல்களில் எனை ஏற்று, மீட்சி தர மறுப்பாயோ?
ஆரோ எனக்குண்டு, இந்த அவனியிலே அரவிந்தா?

பாரோ கொதிக்கிறதே, எனைப்  பாலிப்பாய், பரந்தாமா!

நீராய் கலந்து என்னில், மாசெல்லாம் களைந்திடுவாய்;

பேரேன் உனை என்றும், புண்ணியனே, உனக்கானேன்!
சிறு நகை முகிழ் வதனம், தருகிறதே ஓர் அபயம்;

சிறியேன் இனி மீள்வேன், தெரிகிறதே, உன் சரணம்!

வருமோ சுழல் பிறப்பு, உன் வாசலே நான், வந்த பின்னும்?

வரமே இது போதும், வேண்டுவதே எது இன்னும்?
தந்தேன், எனை நானும், உன் தாளிணைக்கீழ் அம்மானே;

தயையால் எனை ஏற்று, தாங்கிடு நீ, பெம்மானே!

உந்தன் தோள் சாய்ந்து, எனை நானும் இழந்திருப்பேன்;

எந்தன் உயிர் உய்ய, என்னிலே நீ கலந்திருப்பாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s