​(2) (நாடினேன், நரசிம்மா…)

அன்னை அணைப்பிலும் காணாத சுகம்−

ஐயன் நீ அணைக்க, அடியேனுக்குக் கிட்டியதே!

பின்னை இதற்கொரு ஒப்புமையும் வேறுண்டோ? 

பேசிப் புரிய வைக்க, வார்த்தைகளும் தானுண்டோ?
தாயின் அணைப்பெல்லாம், சில காலமே உண்டு;

தந்தையின் அரவணைப்பிற்கு, எல்லையும் தான் உண்டு;

சேயின் உருவாக, எனை ஏற்பார் தாம் எவருண்டு?

தாயினும் பரிவுடையாய், சொல்வாயோ,  நீ இன்று!
அகமும் நிறைந்திடுமோ, அகிலத்தார் அணைப்பினிலே?

ஆவியும் குளிர்ந்திடுமோ, அவர் தம்மின் நெருக்கத்திலே?

சகமும் மறந்து, சுகமும் பெருகிடவே,  தருவாயோ, உனை என்றும்?

சகலமும் உனக்கானேன்; புரிந்ததுவோ அது இன்று?
நீ அணைக்கும் நேரத்தில், என் நினைவெல்லாம் அழிந்திடுதே;

“நான்” என்பதும் அழிந்து, அனைத்தும், நீயாய் ஆகிடுதே;

ஈதென்ன ஆனந்தம், இத்தனை நாள் இழந்தேனே;

என் தேவே, இனியும் என்னை, புறம் நீயும் தள்ளாதே!
கரங்களிலே கட்டுண்டு, காலமெல்லாம் நானிருக்க,

வரம் தருவாய் வள்ளலே, வாழ்ந்து நான் போயிடவே;

நிரந்தரமாய் நீ அணைக்கத் தடை ஏதும் வாராமல்,

பரந்தாமா, என் ப்ரபுவே, பரிந்தே நீ காத்தருள்வாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s