​(சரணடைந்தேன், உனை நானே….)

வாய் கொண்டு சொல்ல முடியாது−என்

வைகுந்தா, வாட்டுதே பல நூறு விஷயங்கள்;

ஆய் நீ என அறிந்து, அடைக்கலமே வந்தடைந்தேன்;

ஆறுதல் தர வேணும், அதற்கே நான் உனைச் சேர்ந்தேன்!
கரணங்கள் இவை யாவும், என் கண்ணா, இனி உனக்காமே;

காத்திடுவாய் எனை நீயே, கணமும் எனைப் பிரியாமே;

சரணங்கள் இவை இரண்டும், எனை மீட்கும் படகாமே;

சம்சாரத் துயர் நீக்கு, இந்த சேய் மனமும் கோணாமே!
ஏழை பங்காளி என, எல்லோரும் உனைச் சொல்லுகின்றார்;

எனக்கு அது புரிய வைக்க, எத்தனை நாள் எடுத்துக் கொள்வாய்?

வாழ்வுந்தன் காலடியே, என்று நான் வந்து விட்டேன்;

வாட்டம் நீ போக்கொழிப்பாய், என்று உளம்

தேர்ந்து விட்டேன்!
தாய் மனமும் அறியாத, தனயனின் துயர் உண்டோ?

தாய் மடியும் தீர்க்காத, தாங்கொணாத் துன்பம் உண்டோ?

சேய் நெஞ்சம் குளிர்ந்திடவே, சற்று நீயும் மனம் இரங்கு;

சரணடைந்த அபலைக்கு, ஒரு அபயம், நீ வழங்கு!
கருவறையாம் இருளறையில், எனை மீண்டும் தள்ளாதே;

கண்ணா, உன் கழலிணையே என் சுகமும், மறவாதே!

திருவருளைத் தந்திடவே, தயக்கம் நீயும் கொள்ளாதே; இந்த−

ஒரு உயிரும் உன் உடைமை தான்; அதை நீயும் மறுக்காதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s