​(தயை புரிவாயா, தாமோதரா?….)

கோதை பிராட்டியை அன்று ஏற்றாயே கோவிந்தா,

கனிவின் பெருக்கமா, இல்லை, அது காதலின் உருக்கமா?

பேதையர் எந்தமக்கும் வேணுமே உன் மனது−

பரிதவிக்கும் பிறவிக்கு அது தானே அருமருந்து?
எமக்கேது ஒரு புகலும், உனை அன்றி, இப்புவியில்?

எம் பிழைகள் பொறுப்பார் யார்? யாமெல்லாம் உன் தயையில்;

சுமப்பதற்கு இயலாத சோகங்கள் எம் வாழ்வில்−

சேவித்தால் மறையாதோ, சரணானோம், கழலிணையில்!
நாச்சியார் நலமுற்றாள், நாயகனாய் உனை வரித்து;

நாங்களுமே நாடி வந்தோம், நெஞ்சிலே உனைச் சுமந்து!

வாழ்ச்சி தர வைகுந்தா, வேணுமடா நீ எமக்கு;

வாரி அணைக்க வந்திடடா, அதிலென்ன தடை உனக்கு?
கதறுகின்றோம் நாங்களுமே, தாய் பசுவாம் உனைப் பிரிந்து;

கன்றுகளாம் எமை ஏற்க, கடிதில் வா, நீ பரிந்து!

உதறி விட்டு அலைந்தொழிந்தோம், இத்தனை நாள் உனை மறந்து;

உள்ளம் இன்று தெளிந்து வந்தோம், உன் திருவடியில் மனம் உவந்து!
தாமதமே செய்யாதே, தயாபரனே, தாங்காதே;

தமியோங்கள் தவறெல்லாம், கணக்கில் நீ வையாதே;

காமமெல்லாம் இனி உனது தாளிணை கீழ் அம்மானே!

கனிந்திடுவாய் இனியேனும், கருணையினால் பெம்மானே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s