​(பொன்னான கால்கள் புண்ணாகிப் போச்சே….)

செவ்வடிகள் நொந்தனவோ,

சொல்வாயோ  மானே,

சோதித்ததும் யாரோ, இந்த−

சோதை மகன் தானோ?
ஏன் நடந்தாய் காடெல்லாம்,

என் கன்னி மயிலே!

ஊன் எனக்கே உருகுதடி, இதை

யாரிடம் நான் சொல்ல?
வனமெல்லாம் திரிந்ததுவோ,

வஞ்சி உந்தன் பாதம்!

தினம் தினமே தேய்ந்ததுவோ−ஒரு

தவிப்பில் எனைக் காண?
கமல மலர் பாதங்கள்,

கன்றியதும்  ஏனோ?

காண மனம் நோகுதடி−இந்த

கண்ணன் பிழை தானோ?
அதரம் போல சிவந்ததுவே−

அடியேனின் தவறால்;

உதரம் கண்ணில் வழியுதடி−உன்

வாட்டமுமே கண்டால்!
கரமிரண்டால் ஏந்துவேனே,

கன்னி உந்தன் பதமே!

சிரமதிலும் தாங்குவேனே−இனி

சிரமம் உனக்கு இல்லை!
நோகாமல், உனைக் காப்பேன்,

நந்தன் மகனை நம்பு!

போகாதே, இனி எங்கும்−உனைப்

பிரியேனே என்றும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s