(தோற்றுப் போக வா,   தாமோதரா…)

நீ பாடும் பாட்டிற்கு−

நானாட வேண்டும்;

நானாடும் ஆட்டங்கள்−

நீ காண வேண்டும்!
உன் கண்கள் அசைவினில் நான்−

உளம் கிறங்க வேண்டும்;

என் கரங்கள் அபினயத்தில்−

நீ மயங்க வேண்டும்!
உன் ராக ஆலாபனை−

எனை உருக்க வேண்டும்;

என் பாத தாளங்கள்−

உனை கரைக்க வேண்டும்!
உன் குரலின் இனிமையில் நான்−

நினைவிழக்க வேண்டும்;

என் குழைவு அழகினில் நீ−

நிலை குலைய வேண்டும்!
வஞ்சி எனது விழி பார்த்து−நீ

வார்த்தை மறக்க வேண்டும்;

எஞ்சிய வரிகளெல்லாம்−

என் மொழியாக வேண்டும்!
நடனத்தின் அழகெல்லாம்−என்

நளினம் காட்டிக் கொடுக்க−

இடம் பெயர்ந்த இதயத்தை−நீ

என்னில் தேட வேண்டும்!
இனியொரு முறை இசைத்திட நீ−

என்றும் தயங்க வேண்டும்;

என் சலங்கை அசைவுக்கு−

தோற்றும் போக வேண்டும்!
காதலி என் அன்பிலே நீ−

கைதியாக வேண்டும்;

ஆதலினால் அடிமையாகி−

தன்னைத் தர வேண்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s