​(வந்தேன், உன் வாசலுக்கே…)

பிறவியில் தள்ளி விட்டாய்−

பேதையாய் வாழ்ந்திருந்தேன்;

உறவுகள் பல பெருக்கி, 

உன்னை நான் தள்ளி வைத்தேன்!
பந்தங்கள் பலவும்  உண்டு;

பலமாய் அதை நினைத்ததுண்டு;

சொந்தங்கள் சொர்க்கம் என்று−

சிந்தையில் களித்ததுண்டு!
இத்தனை பேரிருந்தாலும், 

எனக்கென யாரே உண்டு?

எத்தனையோ போதுகளில்,

என் தனிமை, எனை வாட்டியதுண்டு!
அத்தன் நீ காத்திருந்தாய்−

அணைத்திடவே அருகில் வந்தாய்;

பித்தனாய், புறமே சென்றேன்−

பின், குற்றமும் உனதாய் சொன்னேன்!
வீம்பு கொண்டு, உனை விடுத்தேன்;

வேதனைக்கு வலை விரித்தேன்;

தாம்புக்கயிற்றில் தளைகள் செய்து−

தன்னையே, பிணைத்தும் நின்றேன்!
ஏதங்கள் ஆயிரம் பல்லாயிரமாய்,

எப்பொழுதும் செய்திருந்தாலும்−

பாதங்கள் பற்றிய பின்னே,

பெம்மானே, ” பரம் ” எனக்கேதுமில்லை!
பார்வையால் எனை தூய்மை செய்து,

பக்கம் நீ இருத்திக் கொள்வாய்;

ஓர் மாயமே, இனி செய்யாதே−

உத்தமனாய், உனை, ஊர் சொல்லாதே!
நிந்தனைகள் இனியும் கொள்ளாதே!

நின் தயையுமே, நிறம் கொள்ளாதே!

எந்தாய், நீ மனம் இரங்கு!

வந்தேன், எனை மடி நீ தாங்கு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s