​(2)  (வந்தேன் வாசலுக்கே….)

கழலே நான் பிடித்தேன்;

கவலையெல்லாம் இனி ஒழித்தேன்;

தழலே துன்பமுமே−இனி

தொடராமல், உனை அழைத்தேன்!
எனக்கெது சோகமுமே−

எந்தாய், நீ அருகிருக்க;

எனக்கென்ன வேணும் இனி−

என் இறை நீயும் அணைத்திருக்க!
நாவால் உனைப் பாடி, 

நலிவெல்லாம் போக்கிடுவேன்;

நாயேன் எனைத் தந்து−

நாயகனுக்கு ஆக்கிடுவேன்!
மனதால் உனை நினைத்து−

மற்றதெல்லாம் மறந்திருப்பேன்;

இனமே கண்டு கொண்டு−

என்னில் உன்னை நிறைத்திருப்பேன்!
கரணங்கள் உனக்களித்து,

கலி யாவும் கரைத்திருப்பேன்;

சரணங்கள் சிரம் வைத்து−

சவுக்கியமே அறிந்திருப்பேன்!
உன்னால் உய்ந்திடுவேன்−என

உணர்ந்தே, எனைத் தருவேன்;

என்னால் இயலும் என−

என் பிரானும், உனைத் தருவாய்!
இணைவோம் இருவருமே−

இணைந்து இன்பம் அடைந்திடுவோம்;

இணையில்லா ஒரு உறவை−நாம்

அணுஅணுவாய் அனுபவிப்போம்!;
எனக்குள் வந்தமர்வாய்−

என் உள்ளம் இது உனக்காமே;

உனக்குள் எனை வைப்பாய்−

உன் உடைமையை நீ விலக்காதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s