​(“கோ” பாலன்…எனைக் காப்பான்…..)

மறந்து வந்த பசுவாக,

மண் மீது உழன்றிருந்தேன்;

மறைந்து, என் உள்ளிருந்து,

மேற்பார்வை பார்த்திருந்தாய்!
சோகத்தில் நான் சரிந்த போது,

சோராமல் கரம் கொடுத்தாய்;

மோகமுற்றுவீழ்ந்த போது,

மீட்டெடுத்து கரை சேர்த்தாய்!
நோகடித்து உன்னை நானும்,

நாள், ஆண்டாய் பிரிந்த போது,

“போகட்டும், பாவம்” என்று,

பொறுமையோடு காத்திருந்தாய்!
தேக சுகம் பெரிதாக,

தரணியில் நான் வாழ்ந்திருந்தேன்;

வேகமாக ஓடி ஓடி,

விவேகத்தையே தொலைத்திருந்தேன்!
நாகணமிசை நம்பியை,

நயந்தேத்த மறுத்திருந்தேன்;

“ஆகட்டும், அதனாலென்?” என்று,

ஆதுரத்துடன் அணைக்க வந்தாய்! 
எத்தனையோ அவமதித்தேன்;

எங்கெங்கோ அலைந்திருந்தேன்;

அத்தனையும், அத்தனாக,

அன்போடு உவந்தேற்றாய்!
இத்தனை கருணையுமே−

என் மீது நீ வைத்தாய்;

ஈதிங்கு பெறுவதற்கே−

என்ன தவம் செய்து விட்டேன்?
பித்தனின் பிழை பொறுத்து,

பெம்மான் நீ, நிழல் தந்தாய்;

இத்தனையே, போதுமடா,

இனி வேறெனக்கு, எது வேணுமடா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s