​(அழைக்கிறதே, அலைபாய்கிறதே!….)

கருவிழி இரண்டும், காதலினாலே−உன்

திருமுகம் எங்கும் காண்கிறதே!

ஒரு உயிர் அதற்கும், உன்னை நினைத்தே−

ஒவ்வொரு பொழுதும் கரைகிறதே!
மறந்து விட்டாலே, மனத் துயர் நீங்கும்−என

மங்கை உள்ளமும் நினைக்கிறதே;

மன்னவன் எழிலுரு விழிகளில் தோன்ற−

மொத்தமும் அங்கே மறக்கிறதே!
காலமும் நேரமும், காத்திருந்தாலே−

கணமும், யுகமாய் நீண்டிடுதே;

கோலமும், இளமையும், தாமதம் செய்யவே−

கனலிடை மெழுகாய் மாண்டிடுதே!
தூது சொல்லிட, ஒரு துணை தேட,

தாபமும் என்னைத் தூண்டிடுதே;

ஏது செய்தாகிலும் என்னை உன்னுடன்−

இணைத்திட, என் மனம் வேண்டிடுதே!
அணுவிலும் உன்னைக்  கலந்திடவே−இந்த

அடியேன் உள்ளமும் தவிக்கிறதே;

அன்பெனும் சிறையில் என்றும் உன்னை−

அடைத்திட நெஞ்சமும் துடிக்கிறதே!
“தந்தேன் என்னை” என்று நீ சொல்லி−

தழுவிடவே, மனம் அலைகிறதே;

“கொண்டேன் உன்னை” என்றே களித்திட

கன்னியின் இளமையும் அழைக்கிறதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s