​( மடி மீது தலை சாய்ந்து…)

நிம்மதியாக இந்த ஜீவனும் உறங்க−

நானும் தேடினேன், எனக்கொரு இடமே;

சிம்மத்தின் மடியின் கதகதப்பினிலே−

சிறியேன் கண்டேன், ஓர் அடைக்கலமே!
உறவின் வலைகள், எனக்கங்கு இல்லை;

ஊரார் தொல்லைக்கோ, அனுமதி இல்லை;

பிரிவின் துயரம், தீண்டுவதில்லை−இந்த

பேதைக்கு, உன் மடி, உயர்வின் எல்லை!
வாழ்வின் சங்கடம், உரசுவதில்லை;

வலிமையின் கரங்கள் ஒடிப்பதுமில்லை;

தாழ்வாய் என்னைப் பேசுவாரில்லை;

தமியேனுக்குன் மடி, உயர்வின் எல்லை!
பிறவிக்கு, இனிமேல் காரணமில்லை;

பொல்லா வினைக்கோர் வாய்ப்பும் இல்லை;

துறவிகளுக்கும் இது, அகப்படுவதில்லை−

தூயவா, உன் மடி, உயர்வின் எல்லை!
தளைகள், இனி இந்த அபலைக்கு இல்லை;

தஞ்சம் வந்தேன், உன் தயைக்கேது எல்லை?

இளைத்தோடி வாடும் இடும்பையும் இல்லை;

இறையே, உன் மடி, இன்பத்தின் எல்லை!
“இல்லை உனக்கிது”,  என நீ சொல்லுவதில்லை;

இங்கும், அங்குமாய், நான் அலைவதுமில்லை;

எல்லாம் நீயே, எனக்கு எவருமே இல்லை−

என்றும் இனி நீ, எனைப் புறம் தள்ளுவதில்லை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s