​(ஆசை, ஆசை, உன் மேல் ஆசை தான்…)

உன் கரு நிறம் தொட்டு, 

என் விழிகளில் மை இட ஆசை;

உன் கனிவாய் அமுதுண்ண,

உன் வேங்குழலாக ஆசை;
உன் விழி் வழியும் குரும்பை,

என் கரம் ஏந்த ஆசை;

உன் குமிழ் சிரிப்பழகை,

என் மனதில் பொத்தி வைக்க ஆசை;
உன் மணிமுடி அழகை,

என்றும் ரசித்திருக்க ஆசை;

உன் மதி வதன அழகை,

தனியாய் புசித்திருக்க ஆசை;
உன் கருத்த கூந்தலிடையே,

மலராய் விகசிக்க ஆசை;

உன் விரிந்த மார்பினிலே,

என் முகம் புதைக்க ஆசை;
உன் பரந்த தோளினிலே,

தலை சாய்ந்திருக்க ஆசை;

உன் அகன்ற கரமிடையே,

ஆயுள் கைதியாக ஆசை;
உன் பொலிந்த மேனி அழகில்,

என் உள்ளம் கிறங்க ஆசை;

உன் வலிய உடலம் ஏற்கும்

பீதாம்பரமாக ஆசை;
உன்னை உரசும் அந்த−

பொன் ஆபரணமாக ஆசை;

உனக்காகவே தன்னைத் தரும் 

வாச மலர்களாக ஆசை;
உன் திருப்பதமாம் கமலத்தில், 

என் சிரம் பதிய ஆசை;

உன் உள்ளம் சம்மதித்தால் போதும்,

உன் ராதையாகவும் ஆசை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s