​(வருவாயா?,  உன்னைத் தருவாயா?, என்னைப் பெறுவாயா?….)

எயிறு கொண்டு முதலை அழுந்தப் பிடிக்க,

களிறு வலி கொண்டு, கதறி உனை அழைக்க,

தலைமாறு, கால்மாறாக, பதறி வந்த பரந்தாமா, என்−

நிலை கண்டு, உன் மனமும் இரங்காததேன், இன்று சொல்வாயே!
ஓராயிரம் முதலைகள், இந்த சம்சார சாகரத்தில்−

ஒவ்வொரு நொடியும் அனுபவித்தேன், அவற்றின் பிடி எனும் நரகத்தில்!

பேராயிரம் கொண்ட பெருமானே, ஆரோ இந்த நானிலத்தில்−

பாலிப்பார் எனை? பேசு நீ, இக்கணத்தில்!
கருணையின் உருவாம் நீ, கல்லுக்கும் அருள்வையாம் நீ;

கனிந்த மனம் நான் காண, காத்திருக்க வைப்பாயோ நீ?

வறுமை, உன் வள்ளல் தன்மைக்கு என்றுமே வரலாமோ?

வரம் தரும் வரதனாய் நீ இங்கிருக்க, நான் வாடியே இப்புவி அமையலாமோ?
“ஆதிமூலமே” என ஆனை அழைத்து அன்று வந்தாய்;

ஆதியஞ்சோதியாய், அங்கு, அப்பொழுதே, நின் அருளும் தந்தாய்;

நீதி கேட்டு, உன்முன், இன்று, நான் நிற்கவும் வேணுமோ?

நிமலனே, நின் அருள், எனக்கில்லை என்றும் ஆகுமோ?
வாடினேன், வாடி வலியுற்றேன் வைகுந்தா,

ஓடி வந்தெனக்கு, உன் அருளெனும் மருந்திடுவாய்;

நாடி, நயந்து வந்த எந்தன் வெவ்வுயிரின் துயர் நீக்கி−

சூடிக் கொள்வாய் என்னை, உன் செவ்வடிக்கீழ் ஒரு மலராய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s