​(ஆட்கொள்ளவா, அரவிந்தா….)

ஈதுனக்கு அழகோ, கோபாலா?

தீது செய்யவும், நீ துணிவாயோ?

சூதும், சூழ்ச்சியும், சரி தானோ?

வாது செய்தாலே, நீ இசைவாயோ?
மனதுள், எண்ணம் எதுவாச்சோ?

மங்கையர் இன்னல், இனிப்பாச்சோ?

தினமும் இந்நிலை, எமக்காச்சோ?

தீராத விளையாட்டு, உனதாச்சோ?
சற்று எம் நிலையை நீ அறிந்தாயோ?

சங்கடம் உண்டென்று உணர்ந்தாயோ?

பெற்றவள் பெயரும் கெடலாமோ?

பாருள்ளோர் ஏச, நீ விடலாமோ? 
எம் ஆடைகள், ஆடவன் தொடலாமோ?

எமக்கோர் அவப்பெயர் வரலாமோ?

நமக்குள் இருப்பது, நல் நட்பல்லவோ?

நலிந்து அது போவதும், முறை தானோ?
நதியின் குளிர் எமை வாட்டிடுதே;

நாடி, நரம்பும் நடுங்கிடுதே;

நாழிகையோ, மிக நீண்டிடுதே;

நந்த குமாரா, நீ இரங்கிடுவாய்!
இருகரம் குவித்திடச் சொல்லுகிறாய்;

எம் இருப்பை, சாதகம் ஆக்குகிறாய்;

இருதலைக் கொல்லி எறும்பானோம்;

உன் இளமை வேகம் முன், துரும்பானோம்!
உண்மையில் நீ, எமக்குண்டென்றால்,

ஊரார் பழிச்சொல்லும் ஏற்றிடுவோம்;

பெண்மையின் நாணமும் தொலைத்துவிட்டு, 

பரந்தாமா, உன்னிடம் வந்திடுவோம்!
அகிலத்துக்கோர் ஆடவன் நீ தானே; எமை−

ஆளப் பிறந்தவனும், நீ தானே!

சகலமும், உனக்காய் தந்தோமே; எம்−

சஞ்சலமும் யாம் தொலைத்தோமே!
ஆடைகளுக்கு இனி ஒரு தேவையில்லை; நீ−

அணைத்திட, இங்கோர் தடையுமில்லை;

வாடைக்குளிர் எமை வாட்டிடாமலே−நீ

வேகமாய் வந்தெமை, ஆட்கொள்ளடா!
உனக்காக, எம்மை நீ வரித்து விடு; எம்

உள்ளத்தில் இன்பமும் பெருக விடு;

தனக்காக ஏதும், இனி வேண்டோம்; உன்

தயைக்கொரு பாத்திரம், யாம் ஆவோம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s