​(விடையாய் வா, வைகுந்தா…)

பார்த்திருந்து, பார்த்திருந்து,

பாவை விழி கலங்குதடா!

காத்திருந்து, காத்திருந்து, 

கால நேரம் கரையுதடா!
ஊர் சிரித்து நின்றாலும், என்−

உன்மத்தம், குறையலையே!

யார் பழித்து நின்றாலும்−இந்த

யாதவ மோகம் குலையலையே!
நொடி, நொடியாய், உனை நினைத்து, 

நெஞ்சும், இங்கே துடிக்குதடா;

விடிவெள்ளி வாழ்வில் வர,

வரம் உனையே, வேண்டுதடா!
ஆராத காதலினால், மனம்−

ஆரத் தழுவ விழையுதடா;

தீராத தாபத்தினால், உளம்−

தீக்கனலாய் எரியுதடா!
அனலிடையே  மெழுகாக, இந்த−

அபலை நிலை, ஆச்சுதடா;

புனல் துறந்த மச்சம் போல், இந்த−

பேதை வாழ்வு போச்சுதடா!
ஏங்கி, ஏங்கி, இளைக்கும் இந்த−

ஏழைக்கு அருள், நீ புரிந்திடடா;

என் பரிதவிக்கும் பெண்மைக்கு, நீ−

என்றும் விடை எனவே அறிந்திடடா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s