அஞ்சுதல் நான் ஒழித்தேன்; என்−

அரவிந்தா, உன் அணைப்பில்;

வஞ்சியாய் பிறந்ததுவே−ஒரு 

வரமானது, உன் அருளில்!
காலங்கள் உறைந்ததடா−உன்

கரங்களின் அரவணைப்பில்;

காயங்கள் மறைந்ததடா−உன்

காதலெனும் அருமருந்தில்!
சுகம் எது புரிந்ததடா; என்

சுவர்க்கமோ,  உன் கையில்;

அகமும் அறிந்ததடா; என்

அடைக்கலமோ, உன் கழலில்!
தனி ஒரு உயிரில்லை; எனைத்−

தந்தேன் நான் உன்னிடத்தில்;

இனி ஒரு உறவில்லை; நான்− 

என்றென்றும் உன் நிழலில்!
உனதாய் வந்து விட்டேன்; என்−

உத்தமனே, தள்ளாதே;

எனதுயிர் நீ ஆனாய்;

எனைப் பிரிந்தால், தாளாதே!
கணமும் விலகாதே−என்னைக்

கைது செய்வாய், கரச் சிறையில்;

தனமும் நீ தானே! உனைத்−

தாளிடுவேன் மன அறையில்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s