(வேண்டினேன், ஒரு வரமே)

எனக்கேது மனக்கவலை? ஹே நந்தலாலா,

உன் தாளிணையில் சிரம் வைத்தேன், ஹே ராதே கோபாலா!

நினைவெல்லாம் நீ நிறைந்தாய், ஓ நந்தகுமாரா!

அனைத்துமாய் நீ எனக்கானாய், என் சுகுமாரா!
வாயாரப் பாடிடுவேன், உன் திவ்ய நாமம்;

வரமாகக் கேட்டிடுவேன்,  உன் கோயில் வாசம்;

ஓயாமல் உன் சேவை, செய்திடுவேன் நாளும்;

ஒரு போதும் தள்ளாதே, உன் சேயே நானும்!!
தீராத பாவங்கள் எனை மூடக்கூடும்; உன்−

திருவருளே துணை வந்து, மீட்டாக வேண்டும்;

பாராத முகமேதும், நீ காட்டிடாதே; எனைப்−

பாலிப்பது உன் கருணை; அதையும் மறவாதே!
பிறந்திறந்து, பல ஜன்மம் நான் எடுக்கக் கூடும்;

பேரருளே பெருக வைத்து, தடுத்தாக வேண்டும்;

பேதையைப் பரிவாக, யார் பார்ப்பர் என்றும்?

பரந்தாமா, நீ அன்றி, யார் எனக்கு என்றும்?
கரணங்கள் எல்லாம், இனி உனக்காக வேண்டும்;

காயமிது, உன் வழியில், கருமம் செய்ய வேண்டும்;

தருணங்கள் உனை ஒழிந்து, தள்ளி நிற்காமல்−

தயையோடு, நீ என்னை தடுத்தாள வேண்டும்!
இதுவெல்லாம், இனிதாக நீ செய்வாய் என்று−உன்

இணையடியில் எனைத் தந்தேன், உனக்கானேன்

என்று!

மது நாடும் மலர் வண்டாய், மகிழ்ந்துன்னைச் சேர்ந்து−

மணம் பெறவே, எனைக் கொள்வாய், எம்பிரானே, இன்று!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s