​( உனதானேன், வைகுந்தா…)

உனக்காகக் காத்திருக்கேன், என் நந்தலாலா;

பிணக்கேதும் கொள்ளாதே, வா வேணு கோபாலா!

எனக்காக ஒருவரில்லை, என் பரந்தாமா!

உனக்கது தெரியாதோ, சொல் வைகுந்தா!
உதட்டளவில் உறவுண்டு, உள் நெஞ்சில் பகையுண்டு;

உணர்ந்தேன் நான் அதை இன்று, ஊமைக்கேது மொழி என்றும்?

முகம் பார்த்தால், உனக்கெந்தன் வாட்டங்கள் தெரியாதா?

அகம் கண்ட காயங்கள், அண்ணல் உனக்குப் புரியாதா?
வாய் திறந்து பேசிடவும், வாய்ப்பு இங்கு எனக்கில்லை;

வழக்கென்று தொடுத்தாலும், தீர்ப்பு என் பங்கில்லை;

காயதனில் கனி ஒளித்த, கண்ணா  நீ அறியாயா?

சேய் எந்தன் சுமைகளெல்லாம், இறக்கிடவே வருவாயா?
எனதெல்லாம் துறந்து விட்டு, உன் கரமே நோக்குகின்றேன்;

ஏழையை நீ மடி அமர்த்தும், நாளைக்கே ஏங்குகின்றேன்;

உனதான என் உயிரை, உன் கழலே வைக்கின்றேன்;

உத்தமன் நீ அதை ஏற்க, அனுதினமும் வேண்டுகிறேன்!
போதும், இந்த புவி வாழ்வு, பொன்னடி என் சிரம் வைப்பாய்;

பாவியேனை நீ அணைத்து, புகலிடமும் இனி அளிப்பாய்;

ஏதும் சொல்லி ஏய்த்திடாது, என்னை உனக்கு ஆக்கிடுவாய்;

என் ஆவி உன்னில் அடங்கிடவும், என் ஆயாய் நீயே அருளிடுவாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s